Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரூ10 – ரூ80 க்குள்ள தான்…. வாங்கி போட்டு பாருங்க…. எலும்பு பிரச்சனை இல்லாம வாழுங்க…..!!

உலகின் பிற இனங்களை ஒப்பிடுகையில், தமிழின மக்கள் உணவு, உடை உள்ளிட்டவற்றில்  பாரம்பரியத்துடன் சிறந்து விளங்கியதோடு, அணிகலன் அணியும் அற்புதமான பாரம்பரியத்தையும் கொண்டிருந்தனர். தமிழர்கள் அணிகலன்களை வெறும் அழகுக்காக மட்டும் அணியாமல், ஒவ்வொரு இடத்திலும் நாம் அணியக்கூடிய அணிகலன்களும் தர கூடிய  ஒரு மருத்துவ குணத்தை சொல்லிக் கொடுத்தும்  சென்றிருக்கிறார்கள். அதில், ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தமிழர்களின் பாரம்பரியங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது செம்பு. இப்போதும் கூட பலர் செம்பு காப்பு, மோதிரங்களை பயன்படுத்துகிறார்கள். செம்பு காப்பு அணிவதன் மூலம் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் எலும்புகள் தேய்மானம் அடைதல், கை வலி, மூட்டு வலி போன்றவற்றை கட்டுக்குள் வைக்கிறது.

தாமிரத்தை அதிகப்படுத்தி சருமத்தை பொலிவுடன் வைக்கவும் செம்பு உதவுகிறது. இத்தனை நன்மைகளை அளிக்கக் கூடிய இந்த செம்பு காப்பு மற்றும் மோதிரத்தின் விலை மிக மிக குறைவு தான். எனவே செம்பை மோதிரம் ஆகவோ அல்லது காப்பாகவோ அணிந்துகொண்டால்  உடல் நலத்தை பேணி பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கும். 

Categories

Tech |