அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி எந்த 5 வீரர்களை தக்கவைத்து கொள்ளப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான விளையாடியதால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தொடரிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டன் டோனி தற்போது புதிய அணியை அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக அடுத்த வருடம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் இதற்கு முன்னர் தங்களுக்கு தேவையான ஒரு சில வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, டூ ப்லஸ்ஸிஸ் மற்றும் டோனி போன்றவர்களை மட்டும் வைத்துக்கொள்ள முடிவு செயதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.