வாலிபர் ஒருவர் தனது கிட்னியை விற்று ஐபோன் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் அன்ஹூய் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வாங் ஷாங்கன்(25). இவர் எப்படியாவது ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஒரு கனவை பல வருடங்களாக வைத்துள்ளார். தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. எனவே சிலர் இந்த போன்கள் வாங்குவதற்காக வீடு, கார் உள்ளிட்ட பொருட்களை விற்றுள்ளனர். இப்படி இருக்கையில் ஷாங்கன் தன்னுடைய 17 வயதில் கள்ளச்சந்தையில் கிட்னியை எப்படி விற்பது என்று ஆன்லைன் உரையாடலின் மூலம் அறிந்துள்ளார். இந்நிலையில் ஐபோன் வாங்குவதற்காக தன்னுடைய வலது கிட்னியை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்துள்ளார்.
பின்னர் அதை 3,273 டாலர் விலைக்கு விற்று அந்தப் பணத்தில் ஐபாட்-2, ஐபோன்-4 வாங்கியுள்ளார். அறுவைசிகிச்சையின் போது எனக்கு எதற்கு இரண்டு கிட்னிகள்? நான் உயிர் வாழ ஒரு கிட்னி போதாதா? என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வந்த ஷாங்கனுக்கு சில மாதங்களிலேயே அந்த ஒரு கிட்னியும் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே ஷாங்கனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை கவனித்த அவர் தாயார் அவரை விசாரித்ததில் நடந்த உண்மையை கூறியுள்ளார். இதையடுத்து அவருடைய தயார் காவல்துறையில் கொடுத்துள்ள புகாரின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.