நபர் ஒருவர் தகாத உறவை கைவிட மறுத்த தாயை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே மாவட்டத்தை சேர்ந்தவர் பாரவ்வா(39). இவருக்கு சிவப்பா என்ற மகன் உள்ளார். பாரவ்வா கூலி வேலை செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டதால் இவர் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சிவப்பாவிடம் உன்னுடைய அம்மா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கிறார் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வேறு ஒருவருடனான உறவை விட்டுவிடுமாறு சிவப்பா தன் தாயிடம் கூறி வந்துள்ளார்.
ஆனால் அதற்கு பாரவ்வா ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று பாரவ்வா வயலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது சிவப்பா அவரை மது அருந்த சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிவப்பா தன் தாயை பக்கத்தில் உள்ள வயலுக்கு இழுத்து சென்று கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பாரவ்வாவின் சகோதரி அவரை காணவில்லை என்று தேடி அலைந்தபோது வயல்வெளியில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இறந்த பாரவ்வாவின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சிவப்பாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் பெற்ற தாயை தன் மகனை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து சிவப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.