Categories
தேசிய செய்திகள்

இதுதாண்டா நட்புனு நிரூபித்த…. “இணைபிரியா தோழிகள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின்  பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும். எனவே நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இதை அவருடைய பெற்றோரிடமும் அமிர்தா தெரிவித்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் அமிர்தாவுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் தோழிகள் இருவரும் மனவருத்தத்துடன் இருந்துள்ளனர். இதையடுத்து நாம் இருவரும் வாழும்போதுதான் சேர்ந்து வாழ முடியவில்லை, ஆதலால் ஒன்றாக சாவோம் என்று முடிவு எடுத்துள்ளனர்.

பின்னர் வீட்டில் நாங்கள் இருவரும் வெளியே சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் சம்பவத்தன்று வைக்கம் அருகே உள்ள மூவாற்றுப்புழை ஆற்றுக்கு சென்று கைகளை கோர்த்தவாறு சென்று முறிஞ்சபுலா பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த இருவரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மாணவிகளின் உடல்நிலை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் பூச்சாக்கள் காயலில் கிடந்த அமிர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆரியாவின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |