Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா பூதம் ? கண்டவனெல்லாம் அடிக்கிறான்… கேட்க நாதியில்லை… சீமான் ஆவேசம் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாத்தான்குளத்தில் ஆகஸ்ட் நடந்தது போன்று நெய்வேலியில் நடந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, கேட்க நாதி கிடையாது. எங்களுக்கு என்று ஒரு தலைவன் கிடையாது. தகப்பன் இல்லாத வீடும், தலைவன் இல்லாத நாடும் தறி கெட்டு நிற்கும். இன உணர்வு, தன்மானமே உயிர் என்று வாழ்கின்ற ஒரு தலைவன் இல்லாததால் எங்களை கண்டவனெல்லாம் அடிக்கிறான்.

பக்கத்து எங்களுடைய படகை பறித்து வைத்துவிட்டு அரசுடைமையாக்குவோம் என்று சொல்கிறது. திருப்பிக் கொடுக்க முடியாது என்று சொல்கிறது. ஒரு படகை மீனவன் நாலஞ்சு பேர் சேர்ந்து 30 லட்சம் போட்டு வாங்கி பிழைப்பு நடத்துவான். அந்த படகை அவர்கள் பறித்து வைத்துள்ளார்கள். அந்த நாட்டுக்கு போர்க்கப்பலை இந்த நாடு பரிசாக கொடுக்கிறது.

7பேர் விடுதலையில் இவர்கள் திட்டமிட்டு காலம் கடத்துகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். நாம் எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் யார்கிட்டயும் பதில் இல்லை. 7பேர் விடுதலைக்காக நீண்ட காலம் அரசியல் போராட்டம்,  சட்டபட்ட போராட்டம் நடத்தியுள்ளோம். இதுக்கு மேலயும் விடுதலை தாமதிக்கப்பட்டு,  நீதி மறுக்கப்படுகிறது என்றால் இது எவ்வளவு பெரிய கொடுமை.

அமித்ஷா வருகை குறித்தான கேள்விக்கு அவர் மனிதர்தானே,  அவர் ஒன்னும் பூதம் இல்லையே என்று கூறிய சீமான்,  நாங்கள் வேல் எடுப்பது மறக்கப்பட்ட எங்கள் மூதாதையர் வரலாற்றை மீட்பதற்கு. இவர்கள் அயோத்தியில் ராமர் வச்சு வேலை செஞ்ச மாதிரி, கேரளாவுல ஐயப்பனை தொட்டு பாத்தாங்க… இங்க முருகனை  வச்சு வேலை செய்யறாங்க.

இவர்கள் எப்படி தலைகீழாக நின்று முருகனை தூக்கிக்கொண்டு சுமந்தாலும் அதனால் எனக்கு தான் நன்மை வரும்.  நான் தான் வளருவேனே தவிர அவங்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. கஷ்டப்பட்டு யாத்திரை நடத்தி நாம் தமிழர் கட்சியை பிஜேபி வளர்த்து விடுத்தது.

ஏற்கனவே திடீர்னு அண்ணாமலை வந்து ஆடு, மாடு வளர்கனும்…. இயற்கை வேளாண்மை செய்யணும் அப்படின்னு சொன்னாரு. இதை பத்து வருடமாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |