Categories
உலக செய்திகள்

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை… இனி நீங்களே செய்யலாம்…!!!

மக்கள் அனைவரும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எளிய கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனால் பரிசோதனைக் கூடங்களில் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் மக்கள் வீட்டிலேயே தனக்குத்தானே கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும் வகையில் எளிய கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கருவியின் மூலம் மக்கள் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இந்த கருவி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |