பீட்ரூட் தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
தாளிக்க:
கடுகு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பீட்ரூட், இஞ்சியை எடுத்து சுத்தம் செய்து, தோல் நீக்கி, துருவி எடுத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, துருவிய இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு தாளித்து கொள்ளவும்.
மேலும் அதனுடன் வெங்காயம், துருவிய பீட்ரூட்டை போட்டு நன்கு வதக்கியபின், சிறிது உப்புச் சேர்த்து லேசாக கிளறியதும் முடி வைத்து, நன்கு வேக வைக்கவும்.
பிறகு வேக வைத்த கலவையை இறக்கி, ஆற வைத்து, அதனுடன் தயிரைச் சேர்த்துக் நன்கு கலக்கியபின் பரிமாறினால், ருசியான பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.