Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு அருகில் துப்பாக்கி… பின்னணியில் நடக்கும் கலவரம்…பரபரப்பா இருக்கும் ஃபஸ்ட் லுக் அப்டேட்….!!!

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மீசை, பெரிய தாடி என அசத்தலான தோற்றத்துடன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்திருக்கிறார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் அருகில் துப்பாக்கி கிடக்க, பின்னணியில் கலவரங்கள் நடக்க சிம்பு இறைவனை பிரார்த்திப்பது போல அமைந்துள்ளது. மேலும் அதில்  மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவ. 21-ஆம் தேதி காலை 10:44 மணிக்கு  வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

 

 

Categories

Tech |