சாக்லெட் புடிங் செய்ய தேவையான பொருட்கள்
சாக்லெட் – 50 கிராம்
சர்க்கரை – 1/2 கப்
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
பால் – 2 கப்
ஹெவி கிரீம் – 40 மில்லி லிட்டர்
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் சாக்லெட்டை எடுத்து நன்கு துருவிக் கொள்ளவும். பின்பு கடாயில் பால், சர்க்கரை, கோகோ பவுடர், அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர், உப்பு சேர்த்து நன்கு கலந்ததும், எடுத்து அடுப்பில் வைத்தது, அதை கைவிடாமல் நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
பிறகு அதில் துருவிய சாக்லெட்டை சேர்த்து, பாதியாக வரும் வரை நன்கு கிளறியவுடன், ஹெவி கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து சிறிது கிளறியபின் இறக்கவும்.
பின்பு இறக்கி வைத்த கலவையை, ஒரு கிண்ணத்தில் கொட்டி ஆற வைத்து, எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ந்து கெட்டியானதும், அதன் மேல் துருவிய வெள்ளை சாக்லெட்டால் அலங்கரித்து பரிமாறினால் இனிப்பான ருசியில் சாக்லெட் புடிங் ரெடி,