Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ்க்கு அன்பிற்குரியவர்கள் இணையட்டும்” அதுக்கப்புறம் தனியா பிரிஞ்சிரனும்…. பிரிட்டன் பிரதமர் தகவல்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலகி இருக்கலாம் என்று பிரிட்டன் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

பிரிட்டன்: குடும்ப உறவுகளையும், அன்பிற்குரியவர்களையும் பிரித்து வைத்த இந்த கொரோனா வைரசால் இந்த வருடமே மிக மோசமாக அமைந்திருப்பது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது குடும்பங்கள் ஒன்றிணைந்து இருக்கட்டும் என்று விரும்புவதாக நேற்று பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று கொரோனா கட்டுப்பாடுகளையெல்லாம் கொஞ்சம் விலக்கி வைத்து விட்டு தன்னுடைய குடும்பத்தாரோடு 5 நாட்கள் மட்டுமாவது மக்கள் இணைந்திருக்கும் வகையில் டிசம்பர் 24 – 28 வரை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் இணைந்து பண்டிகை கொண்டாடலாம்.

மேலும் தேவாலயங்களிலும் ஆராதனை நடத்தலாம் என்றும் அமைச்சர்கள் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது சம்பந்தமாக நேற்று பிரதமர் இல்லத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இங்கிலாந்து சுகாதார துறையின் மூத்த மருத்துவர் Susan Hopkins கூறுகையில், இந்த திட்டம் உண்மைதான் என நான் நம்புகிறேன்.

ஆனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் ஒவ்வொரு நாளுக்கும் இணையாக 5 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை மக்கள் கொண்டாடி முடித்த பிறகு நாடு மீண்டும் ஏதாவது ஒரு வகையில் முடக்கப்படும் என்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பில்லை. எனவே கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் மக்கள டிசம்பரில் கொரோனா நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஐந்து நாட்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிரதமர் ரிஸ்க் எடுக்கிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடு தளர்விற்கு அடுத்து நிகழவிருக்கும் இழப்புகளுக்கு பிரதமரை தான் எல்லோரும் குறைசொல்ல போகிறார்கள் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |