Categories
பல்சுவை

“நான் ஒளிஞ்சிருக்கேன்” குட்டி யானையின் அறியாமை…. வைரலாகும் புகைப்படம்…!!

கரும்பு தோட்ட உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்து நின்று யானைக் குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது

குழந்தையாக இருந்தால் மனிதர்களும் சரி விலங்குகளும் சரி ஒன்று போல் தான் இருக்கின்றன. நாய்குட்டி, பூனை குட்டி, குரங்கு குட்டி போன்றவை செய்யும் சேட்டைகளை நாம் நேரடியாக பார்த்திருப்போம். அதில் சில க்யூட்டான சேட்டைகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். தற்போது அதுபோன்று க்யூட்டான சேட்டை ஒன்று தாய்லாந்தில் நடந்துள்ளது.

யானைக்குட்டி ஒன்று கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து கரும்புகளை சாப்பிட தொடங்கியுள்ளது. திடீரென தோட்டத்தின் உரிமையாளர் அங்கு வந்ததும் அதனை அறிந்த யானைக்குட்டி தான் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்து  நிற்கிறது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் அதன் குழந்தை தனத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |