சுறா புட்டு செய்ய தேவையான பொருட்கள் :
பால் சுறா மீன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 250 கிலோ
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பால் சுறா மீனை பெரிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் வெட்டிய மீன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
மேலும் சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு பாத்திரத்தில் வேக வைத்த மீனின் தோல் மற்றும் எலும்புகளை நீக்கி தசை பகுதியை மட்டும் உதிர்த்து கொள்ளவும்.
அதனை தொடர்ந்து, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். பின்பு அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும்,அதில் உதிர்த்து வைத்த மீனை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, பரிமாறினால் ருசியான சுறா மீன் புட்டு தயார்.