இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – 1/2 கப்
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளி – சிறிதளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
செய்முறை:
முதலில் இஞ்சியை எடுத்து கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி உற வைத்துக் கரைத்து கொள்ளவும்.
அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,நறுக்கிய இஞ்சி, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துதனித் தனியாக வறுத்து எடுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வதக்கி வைத்த பொருளுடன், சிறிதளவு வெல்லம் சேர்த்து, அதனுடன் புளிக் கரைசலையும் ஊற்றி மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், அதில் அரைத்த கலவையை கொட்டி சிறிது கிளறி இறக்கினால், ருசியான இஞ்சி சட்னி தயார்.