பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவின் யுத்திகள் அப்படி என்றாலே வெளியே சொல்வதற்கான விஷயமல்ல. ஒரு அரசியல் கட்சி தன்னுடைய உத்தியாக தேர்தலில் ஜெயிப்பதற்கு எப்படி எல்லாம் செய்வோமோ… அதே மாதிரி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றோம்
தமிழ்நாட்டின் பிஜேபி வளர்ந்து வருகின்ற கட்சியாக, அனைவராலும் விரும்பப் படக்கூடிய கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய வேல் யாத்திரை எல்லாயை எல்லா இடத்திலும் காவல்துறை தொந்தரவு செய்கிறார்கள் என்றாலும் கூட ஆயிரக்கணக்கான மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். எனவே அரசு வேல் யாத்திரைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.