மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரம் பணிமனையிலிருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த நபர், சாலையில் படுத்து உருண்டு, பிரண்டு அலப்பறை செய்தார். பின்னர் “என்ன நினைத்தாரோ தெரியவில்லை”!!.. தீடீரென ஓடிப்போய் அந்த பேருந்தை தனது இரண்டு கைகளாலும் தடுத்தார். உடனே ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டார். அத்தோடு விடாமல்… போதை நபர் பேருந்து ஓட்டுநரிடம் சென்று வாக்குவாதம் செய்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த போஸ்டர் வெங்கட் என்பது தெரிய வந்தது. மாநகரப் பேருந்தை குடிபோதையில் வெங்கட் வழிமறித்து அட்டகாசம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.