Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக அளவு…ருசியை தூண்டும்…அவல் போண்டா…ரெஸிபி..!!

அவல் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி                         – ஒரு கைப்பிடி அளவு
தட்டை அவல்                        – ஒரு கப்
எண்ணெய்                               – தேவையான அளவு
உருளைக்கிழங்கு                 – 1
பச்சை மிளகாய்                     –  3
தயிர்                                            –  2 டேபிள்ஸ்பூன,
உப்பு                                             – சிறிதளவு
சீரகம்                                           – சிறிதளவு
பெருங்காயத்தூள்                 – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் அவலை போட்டு சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்கவும்.பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடி,பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி குலைய  வேக வைத்து,தோல் உரித்து, நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து கொள்ளவும்.

மேலும், அதனுடன் உருளைக்கிழங்கு, மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிசைந்து கொள்ளவும். பின்பு பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளாக உருட்டி வைத்த மாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால், ருசியான அவல் போண்டா ரெடி.

Categories

Tech |