Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த…சூப்பரான…மைசூர் போண்டா ரெசிபி..!!

மைசூர் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு                      – 1/2 கப்,
கறிவேப்பிலை                         – சிறிது (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய்                       – 1 (பொடியாக நறுக்கியது),
மிளகு                                         – 1 டீஸ்பூன்,
தேங்காய்                                  – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு                               – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள்                  – 1 சிட்டிகை,
உப்பு                                            – தேவையான அளவு,
எண்ணெய்                                – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

முதலில் பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை எடுத்து தண்ணிரில் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை நன்கு கழுவி, மிக்ஸிஜாரில் போட்டு, சிறிதளவு  தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

பின்பு தேங்காய்,கறிவேப்பிலை,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும்  பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, தேங்காய், பெருங்காயத் தூள் சேர்த்து மாவை நன்கு பிசைந்ததும் அதில் சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.

அதன் பிறகு  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான மைசூர் போண்டா ரெடி.

Categories

Tech |