Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் ? யாருமே சொல்லல… ஒன் மேன் ஆர்மி ஆன எடப்பாடி …!!

சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு, நீட்தேர்வு என்று எப்போது பார்த்தாலும் குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் சரி, ஊடக நண்பர்களும் அதே கேள்விதான் கேட்கிறார்கள்.

ஆனால் கேட்க வேண்டிய இடத்துல, கேட்க மாட்டேங்கிறாங்க. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும். நீட் தேர்வு கொண்டு வந்தது யாரு ? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம் அந்த ஆட்சியில் அங்கம் வகித்தது. அந்த காலகட்டத்தில்தான் நீட்தேர்வு கொண்டு வந்தாங்க.

ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மாறி பேசுறாங்க. இவர்கள் கொண்டுவந்ததை நாங்கள் தடுத்து நிறுத்தி கொண்டிருந்தோம், சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே நாம் அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில் நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழல் இருக்கின்றது. ஆகவே இந்த காலகட்டத்திலும் நாம் எண்ணிப் பார்த்தோம்.

எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து என்னுடைய எண்ணத்திலே உதிக்கப்பட்டது உள்ஒதுக்கீடு. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தோம். அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். இன்றைக்கு அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு 7.5% இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு ஆணையிட்டு உத்தரவு வழங்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

7.5% உள் ஒதுக்கீடு என்று சொல்லும் போது சேலம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் இன்று மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். அதில் 21 ஆவது பேர் நீட் தேர்வில் 211 மார்க் வாங்கி வாங்கி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னால் இந்த அரசு ஏழை எளிய மாணவர்கள் மீது எந்தளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |