மசாலா பூரி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – அரைகப்
கொத்தமல்லி – அரைகப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரக பொடி – 1ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சிஜாரில் இஞ்சி,பூண்டை சேர்த்து அரைத்து தேவையான அளவு எடுத்து கொள்ளவும். பின்பு அதே மிக்சிஜாரில் கொத்தமல்லி இலை,புதினா,பச்சை மிளகாயை சேர்த்துசிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் அரைத்த புதினா விழுது, இஞ்சி பூண்டு விழுது,சீரகபொடி,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக, பூரி செய்யும் அளவுக்கு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை அடுத்து பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டியபின் சப்பாத்தி மாவு தேய்ப்பது போல் தேய்த்து வைக்கவும்
மேலும் அடுப்பில்வாணலியை வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் தேய்த்து வைத்த மாவை போட்டு பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான மசாலா பூரி ரெடி.