Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தாய் தந்தைக்கு கொலை மிரட்டல்… மகன் செய்த காரியம்…!!!

புதுச்சேரி அருகே வீட்டை எழுதி வைக்க வேண்டும் என தாய் தந்தைக்கு மகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை புதுநகர் பகுதியில் கனகராஜ் மற்றும் மங்கள ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சங்கர் தரைதளத்தில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தந்தையிடம் சங்கர் கூறியுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

அதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், தாய் தந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கனகராஜ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |