அரியானா மாநிலத்தில் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநிலத்தில் பண்டிகை காலம் முடிந்து மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 11 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கொரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒருநாள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.