சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து என்னுடைய எண்ணத்திலே உதிக்கப்பட்டது உள்ஒதுக்கீடு. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை கொண்டுவந்தோம். அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். இன்றைக்கு அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு 7.5% இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு ஆணையிட்டு உத்தரவு வழங்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் வெறும் 6பேர் தான் படித்தார்கள். தமிழகம் முழுவதும் 3054 அரசு பள்ளி இருக்கின்றது. அதுல 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த ஆண்டு 6 மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 313 பேருக்கு இடம் கிடைச்சிருக்கு. பல் மருத்துவ கல்லூரி சேர்த்து அரசு பள்ளியில் படித்த 313 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைச்சிருக்கு.
மாண்புமிகு அம்மாவின் அரசு இயற்றிய 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் வாயிலாக ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் கூட மருத்துவ கல்வி படிக்க கூடிய சூழ்நிலையை நம்முடைய அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன். இப்படி கல்வியிலே பல்வேறு புரட்சியை செய்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதை இந்த நேரத்திலே கோடிட்டு காட்டுகின்றேன்.
2019-20இல் நீர் மேலாண்மையில் தேசிய விருதை பெற்றிருக்கின்றோம். ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதற்காக நீர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக அம்மாவுடைய அரசு சிறப்பான முறையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு தேசிய அளவில் விருது பெற்றிருக்கின்றோம். இந்த ஒரு துறை மட்டுமல்ல… பல துறைகளிலே தேசிய விருது பெற்று, சாதனை படைத்த அரசு எங்களுடைய அரசு என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.
நீர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக இந்த ஏரிகள், குளங்கள் அனைத்தும் துர் வாரப்பட்டன. அதேபோல கால்வாய்கள் எல்லாம் தூர் வாரட்டப்பட்டன. கால்வாய்கள் எல்லாம் நவீனமயமாக்கப்பட்டு, நீரை சிக்கனமாக பயன்படுத்தும் சூழல் உருவாகி தந்தோம். அதன் மூலமாக என்றைக்கும் இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்ட பகுதியில் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரசு கொள்முதல் செய்த சாதனையை மிஞ்சி சரித்திர சாதனையாக 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரசு கொள்முதல் நிலையத்தில் செய்யப்படுகின்றது. 23 லட்சம் எங்க ? 32 லட்சம் எங்கே ? ஆக அம்மாவின் அரசு எந்த அளவுக்கு சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.