கோவையில் ஸ்டாலினை விமர்சிக்கும் மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை விமர்சித்து போஸ்டர் ஒட்டினால் நாங்களும் ஒட்டுவோம் என்று உதயநிதி ஒரு மாதத்திற்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் கோவையில் ஸ்டாலினை விமர்சித்தே மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டர்களில் ஊரடங்கு காலத்தில் அயராது உழைத்தவரா என்ற கேள்வி கேட்டார் போல் பழனிசாமியின் புகைப்படமும், அதன் அருகிலேயே WIG-U வில் மாட்டியவரா இந்தக் கேள்வி கேட்டார் போல் ஸ்டாலின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.