தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செல்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே – ஜூன் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை பிரசாரம் தொடங்குகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்ற திமுக பல்வேறு வியூகங்களை கணித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.