நடராஜர் கோவிலில் அதிசய நிகழ்வாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. என்னவென்றால் இந்த கோவிலில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளதால் பக்தர்கள் அதை பார்த்து வியப்படைந்துள்ளனர்.
இதையடுத்து தரிசனத்திற்காக வந்த பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அதிசய நிகழ்வை கண்ட பொதுமக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து நடராஜ பெருமானை தரிசனம் செய்துள்ளனர்.