Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (20-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

20-11-2020, கார்த்திகை 05, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.30 வரை பின்பு வளர்பிறை சப்தமி.

உத்திராடம் நட்சத்திரம் காலை 09.22 வரை பின்பு திருவோணம்.

சித்தயோகம் காலை 09.22 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சஷ்டி விரதம்.

சூரசம்ஹாரம்.

முருக வழிபாடு நல்லது.

திருக்கணிதப்படி குரு பெயர்ச்சி பகல் 01.23 மணிக்கு.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் –  20.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களின் சுமுக உறவு உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் விரயங்கள் உண்டாகும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத பிரச்சினை உருவாகும். கடின உழைப்பால் தொழிலில் லாபம் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் இருப்பவர்கள் இடம் அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் மனக் குழப்பம் இருக்கும். தொழிலில் நிதானத்துடன் செயல்படுவது நல்லதைக் கொடுக்கும்.வெளியிடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள் அதுவே நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும். சேமிப்பு பணம் உயரும். உத்தியோகத்தில் நண்பர்களின் ஆதரவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு அகலும். புதியவர் இதில் லாபம் கிடைக்கும். தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகப் பகை நீங்கும். வருமானம் பெருகியிருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு உண்டாகும். செய்யும் செயல்களில் காலதாமதம் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நீங்கும்.தொழில் ரீதியில் மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் கொடுத்தாலும் லாபம் கிடைக்க வைக்கும். பெரியவர்களின் ஆதரவு உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும் உத்தியோகத்தில். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியில் பலவீனமாக இருப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் தாமதம் உண்டாகும். வீட்டில் அனுசரித்துச் செல்லவேண்டும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் பயணங்களால் கவனம் வேண்டும்.

தனுசு

உங்கள் இராசிக்கு தொழிலில் எதிர்பாராத பிரச்சனைகள் இருக்கும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழல் இருக்கும். நண்பர்களின் உதவியால் ஓரளவு சிக்கல்கள் நீங்கும். புதிய முயற்சிகளால் வீட்டில் ஆதரவும் உண்டாகும். நிதானம் வேண்டும் எந்த ஒரு செயலிலும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்.குழந்தைகள் வழியில் இருந்த மன கவலைகள் நீங்கி நிம்மதி இருக்கும். உத்யோகத்தில் பொருளாதாரம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நிறைவேறும் அதில் சில இடையூறுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத அலைச்சல் இருக்கும். வீண் விரயம் உண்டாகும். வியாபார ரீதியில் பயணங்களால் அனுகூலப் பலனை கொடுக்கும். எதிர்பாராத உதவியால் பணப் பிரச்சனை நீங்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

Categories

Tech |