Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 20…!!

நவம்பர் 20  கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

 284 – டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

1194 – புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.

1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.[1]

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது.

1789 – நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது.

1820 – தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1910 – பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அரசுத்தலைவர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அரசுத்தலைவராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.

1923 – செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)

1936 – எசுப்பானிய அரசியல்வாதி ஒசே அந்தோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி அச்சு நாடுகள் அமைப்பில் இணைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் கில்பர்ட் தீவுகளில் தரவா நகரில் தரையிறங்கியதில், அங்கிருந்த சப்பானியப் படைகளினால் பெரும் தாக்குதலுக்குள்ளானர்கள்.

1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.

1947 – இளவரசி எலிசபெத் – இளவரசர் பிலிப்பு திருமணம் இலண்டனில் இடம்பெற்றது.

1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.

1968 – மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 78 தொழிலாளர்கள் இறந்தனர்.

1969 – வியட்நாம் போர்: வியட்நாமில் இடம்பெற்ற மை லாய் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை பிளெயின் டீலர் என்ற பத்திரிகை வெளியிட்டது.

1969 – அமெரிக்கப் பழங்குடி செயற்பாட்டாளர்கள் அல்காட்ராசு தீவை ஆக்கிரமித்தனர். இத்தீவைப் பின்னர் அமெரிக்க அரசு 1971 சூன் 11 இல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

1977 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுரேலியப் பிரதமர் மெனசெம் பெகின் உடன் அமைதிப் பேச்சுக்களுக்காக இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.

1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.

1979 – பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்: சவூதி அரேபியா, மெக்காவில் கஃபா மசூதியைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரான்சியப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1985 – மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

1991 – 19 பேரடங்கிய அமைதிப் பணிக் குழுவுடன் சென்ற அசர்பைஜான் எம்ஐ-8 உலங்குவானூர்தி ஒன்று ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1992 – இங்கிலாந்து வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பெரும்சேதம் ஏற்பட்டது.

1993 – மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

1994 – அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.

1996 – ஆங்காங்கில் அலுவலகக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 41 பேர் உயிரிழந்தனர், 81 பேர் காயமடைந்தனர்.

1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1999 – இலங்கையில் மன்னார், மடுத் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 31 தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டனர், 64 பேர் காயமடைந்தனர்.[2][3]

2015 – மாலியில் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

1750 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (இ. 1799)

1858 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (இ. 1940)

1889 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (இ. 1953)

1905 – மினூ மசானி, இந்திய அரசியல்வாதி (இ. 1998)

1910 – எம். கே. ராதா, தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1985)

1923 – நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)

1925 – இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 1968)

1940 – ஏரியே வார்செல், இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளர்

1940 – வெண்டி டோனிகர், அமெரிக்க இந்து சமய ஆய்வாளர்

1942 – ஜோ பைடன், அமெரிக்க அரசியல்வாதி

1946 – மாசுக்கோவின் மறைமுதுவர் கிரீல், உருசிய மரபுவழித் திருச்சபை ஆயர்

1950 – தேவா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்

1957 – குட்லக் ஜொனத்தன், நைஜீரியாவின் 14வது அரசுத்தலைவர்

1962 – ராஜ்குமார் கிரானி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1976 – ஜான் விஜய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1980 – சாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1989 – தன்சிகா, தமிழகத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

1861 – பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1798)

1882 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (பி. 1837)

1910 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (பி. 1828)

1934 – வில்லெம் தெ சிட்டர், இடச்சுக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1872)

1952 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (பி. 1866)

1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)

1988 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள்

புரட்சி நாள் (மெக்சிக்கோ)

ஆசிரியர் நாள் (வியட்நாம்)

திருநர் நினைவு நாள் (அகனள், அகனன், ஈரர், திருனர் சமூகம்)

பன்னாட்டு ஆண்கள் நாள்

Categories

Tech |