நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைக்கு செல்ல இயலாதவர்கள் அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் நடமாட இயலாத நிலையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நல குறைபாடு அல்லது வயது மூப்பு காரணமாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெற தகுதியான ஒருவரை ரேஷன் கடையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ரேஷன் கடை பணியாளரிடம் ஒப்படைத்து பொருட்களை பெற்று செல்லலாம்.பொருட்கள் பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் விவரம் தவறாது பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
வட்ட வழங்கல் அதிகாரி அந்த மனுவின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு கோரிக்கையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தகுதி இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு அனுமதி வழங்குவார். அங்கீகரிக்கப்பட்ட நபர் அத்தியாவசிய பொருள் பெறுவதற்கு யாருக்காக பொருள் பெற உள்ளாரோ அவர்களது ரேஷன் அட்டையை எடுத்து செல்ல வேண்டும்.கடை பணியாளர் ரேஷன் அட்டை எண் அடிப்படையில் விற்பனை உள்ளீடு செய்து அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு பொருட்களை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.