Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக்‍ தொழிற்சாலை தொடங்க பொதுமக்‍கள் எதிர்ப்பு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாங்கோடு புலியூர் சாலை மஞ்சாலுமூடு ஆகிய ஊராட்சி பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜபா  என்பவர் பிளாஸ்டிக் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு கட்டுமான பணிகளையும் தொடங்கியுள்ளார்.

இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் விவசாயிகளும் ஆலை முன்பு கருப்புக்கொடி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |