Categories
சினிமா

முறுக்கு மீசையுடன் வந்து “I am back ” சொல்லுங்க…. தவசிக்கு நம்பிக்கையூட்டிய ரோபோ சங்கர்…!!

மீசையுடன் மீண்டு வர வேண்டும் என்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட தவசிக்கு ரோபோ சங்கர் நம்பிக்கையூட்டி உள்ளார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார்.

உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தனது சிகிச்சைக்கு உதவும் படி வேண்டுகோள் வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டார். அதனை பார்த்த திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை கொடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும் சூரி 20 ஆயிரம் ரூபாயும் அவருக்கு கொடுத்து உதவினர்.

மேலும் விஜய் சேதுபதி தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததோடு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அதனையடுத்து நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் ரோபோ சங்கர் நேரில் சென்று நிதியுதவி வழங்கியதோடு, “உங்கள் போட்டோவை பார்த்த போது கவலையாக இருந்தது. மன உறுதியை கைவிட்டு விடாதீர்கள். பழையபடி உங்கள் மீசையை பார்க்கவேண்டும். மீண்டு வந்து ஐ அம் பேக் என்று கூறுங்கள்” என நம்பிக்கையூட்டி தவசியிடம் பேசியிருந்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |