தென்காசியில் குழந்தைகளின் ஆபாச படங்களை நண்பர்களுக்கு செல்போன் மூலமாக பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். அவர் செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தைகளை தவறாக படம் எடுப்பது, அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.