Categories
மாநில செய்திகள்

வான்வழி ஆம்புலன்ஸ் உள்ளதா? தமிழக அரசுக்கு கேள்வி?…!!!

தமிழகத்தில் வான்வெளி ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மலைப் பகுதியில் உள்ள மக்கள் அவசர காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களுக்கு அவசர வசதி சென்று சேரும் வகையில் போதுமான அளவு ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய கோரிய வழக்கில், வான்வெளி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்படி வான்வெளி ஆம்புலன்ஸ் இல்லை எனில் எப்போது ஏற்படுத்தப்படும் என்று அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |