Categories
தேனி மாவட்ட செய்திகள்

எத்தனை பேருக்கு இந்த மனசு….? குண்டும் குழியுமான சாலை…. தனி ஆளாக காவலர் செய்த செயல்…. குவியும் பாராட்டு….!!

வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திய பள்ளங்களை போக்குவரத்து காவலர் சமன் செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருவதால் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை பார்த்த கம்பம் பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம் சாலையை சமன் செய்வதற்காக ஜல்லி கற்கள் ஆகியவற்றை தனியாளாக கொண்டுவந்து சீரமைப்பு பணியை தொடங்கினார். இதனை பார்த்த பொதுமக்கள் யாரும் அவருக்கு உதவுவதற்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.

ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தனியாளாக யாரையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து மாணிக்கம் சாலையை சீரமைக்கும் பணியை செய்தார். அவர் பள்ளங்களை சமன் செய்ததால் வாகன ஓட்டிகள் எந்த சிரமும் இன்றி சாலைகளில் செல்ல முடிந்தது. போக்குவரத்து காவலரான தாமரை மாணிக்கம் செய்த இந்தச் செயல் பலரது பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் அவருக்கு வெகுமதி வழங்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |