துலாம் ராசி அன்பர்களே…! வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்வீர்கள்.
உங்களின் மனம் தூய்மையாக இருக்கும்.நெருங்கியவர்களிடம் உங்கள் மனக் குறையை சொல்லி ஆதங்கத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருந்தாலும் கவலை கொள்ள மாட்டீர்கள். தன வரவுக்கு குறை இல்லை. உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பொறுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம். பண விஷயத்தில் அடுத்தவர்களை தயவுசெய்து நம்ப வேண்டாம். உத்யோகத்தில் செல்பவர்கள் வெளிப் பயணம் செல்லும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும் முன்னேற்றத்தை கொடுக்கும்.
கணவன் மனைவி இருவரும் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள். பேச்சில் நிதானம் கண்டிப்பாக வேண்டும். குலதெய்வத்தை மனதார நினைத்து எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.