நடிகை கங்கனா ‘தலைவி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்க்கு கிளம்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது கங்கனா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
It’s never easy to say bye but time to say bye to my mountains, leaving for last schedule of Thalaivi to Hyderabad, post that cos of back to back filming commitments might not be back in Manali anytime soon but thank you Himalayas for giving me shelter in testing times ❤️ pic.twitter.com/KNGKh8QmWB
— Kangana Ranaut (@KanganaTeam) November 19, 2020
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா இப்படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டியுள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பரதநாட்டியம் ஆடவும் கற்றுக்கொண்டுள்ளார் . இந்நிலையில் கங்கனா தலைவி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் கிளம்பியுள்ளதாக டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.இதனால் இத்திரைப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .