கும்பம் ராசி அன்பர்களே…! சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழல் இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நடக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொண்டதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கக்கூடும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். செய்யும் செயலில் நேர்த்தி இருக்கும். சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். எப்பொழுதும் எதையோ பற்றி யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். பெரியவர்களின் ஆசியும் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மஞ்சள் மட்டும் இளம் சிவப்பு நிறம்.