Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பழையபடி முறுக்கு மீசை வரணும்” பார்க்க சென்ற பிரபலம்…. தவசியின் நம்பிக்கையான பதில்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் நேரில் சந்தித்து பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையோடு அவருக்கு அப்பாவாக வலம் வந்தவர் தவசி. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே உடல் மெலிந்து போய் மிகவும் எலும்பும் தோலுமாக இருக்கும் தவசி தனது புற்றுநோய் சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டதையடுத்து நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் அவரின் சிகிச்சைக்காக பண உதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் மதுரைக்கு சென்று தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் பண உதவி அளித்ததோடு மட்டுமல்லாமல், “பழையபடி உங்களுடைய முறுக்கு மீசையை திரும்ப பார்க்கணும்” என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த தவசி, “நான் மீண்டும் வருவேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |