இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,58,484 ஆக உயர்ந்துள்ளது. 4,43,303 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 83,83,603 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை 1,31,578 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.