நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வெளியான டீசரில் நடிகர் சிம்பு தனது கையில் பாம்பு ஒன்றை தூக்கி வருவது போல காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிக்கு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில்,
ஈஸ்வரன் பட குழுவின் சார்பில் அது கிராபிக்ஸ் காட்சி என்று விளக்கம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய அனுமதி பெறும் வரை, படத்தின் டீஸர், போஸ்டர்கள் பகிர்வதை உடனடியாக நிறுத்துமாறு படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.