தர்மபுரி அருகே மாரண்டஹள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாலக்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட ஏழு குண்டூர் அருகே பஞ்சப்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. இறை தேடி சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.
யானையின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரக பாலக்கோடு வனக்காவலர்கள் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.