மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தி 103 ஆவது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி இல்லத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒட்டுமொத்த தேசத்தையும் ஈர்க்கக்கூடிய தலைமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் திருமதி இந்திரா காந்தி என தெரிவித்துள்ளார். திறமையான பிரதமராகவும் அதிகாரமிக்க பெண்மணியாகவும் திகழ்ந்த அவருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதாக கூறி உள்ளார்.