காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரிலிருந்து 4 பயங்கரவாதிகள் பேருந்தில் ஜம்மு நோக்கி வருவதாகவும் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர்ஓட்டா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப் பகுதியில் பதுங்கி உள்ளனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.