தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பிற்காக மிகவும் மெதுவாக செல்ல வேண்டியது இருக்கும். மலைப் பகுதியில் வசிக்க கூடிய மக்களுக்கு அவசர மருத்துவ சேவை வசதி தேவை பட்டாலும் கூட, ஆம்புலன்சும் பாதுகாப்பிற்காக மெதுவாகவே பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில்
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களுக்கு அவசர வசதி சென்று சேரும் வகையில் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய கோரிய வழக்கில், ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அப்படி வான்வழி ஆம்புலன்ஸ் இல்லையெனில், எப்போது ஏற்படுத்தப்படும் என்று அரசு பதில் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.