கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி,
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கனமழைக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.