மீனம் ராசி அன்பர்களே…! குடும்ப நலனுக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் கனவை நிறைவேற்றி விடுவீர்கள். நட்பு மலரும். வியாபாரத்தில் மாற்றம் கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவு எடுக்கக் கூடும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் சச்சரவு கூடும். பொறுமையாக இருக்க வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மனோ தைரியம் கூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் இருக்கும். முன் கோபம் வராமல் தடுக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும்.
மனைவியிடம் ஆலோசனை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். மனதில் சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். வயிறு பிரச்சனைகள் இருக்கும். மாணவக் கண்மணிகள் சிந்தித்து பாடங்களை படிக்க வேண்டும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.