உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி SPACE X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
SPACE X டெஸ்லா நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் தொடர் சாதனை படைத்து வருகிறார். SPACE X நிறுவனம் முதன் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ள நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் வளர்ச்சி அடைந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதன் பங்குகள் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மஸ்க்கின் சொத்து மதிப்பு 115 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இதன் மூலம் அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சொத்துப் பட்டியலில் 110 பில்லியன் அமெரிக்க டாலருடன் உள்ள பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெவ் தொடர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.