பெங்களூருவில் நடைபெற உள்ள 23-வது தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை 25க்கும் மேற்பட்ட நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகின்றன. 100-க்கும் அதிகமான புதிய தொழில்கள் சுமார் 4,000 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 70-ற்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைத்து வெளிப்படுத்துகின்றனர்.
இந்த மாநாட்டை டெல்லியில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தொழில்துறை அமைச்சர் திரு. ஜெகதீஷ் ஷெட்டர் பங்கேற்கின்றனர். ஆஸ்திரேலிய பிரதமர், சுச்சர்லாந்த் துணை அதிபர் ஆகியோர் காணொளியின் மூலம் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.