இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் லங்கா பிரிமியர் லீக். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள லசித் மாலிங்கா லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலிங்கா கடந்த 8 மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கையை சேர்ந்த வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் போட்டி நடைபெறும் இடமான ஹம்பாந்தோட்டையை சென்றடைந்த நிலையில் லசித் மாலிங்கா இன்னும் அணியுடன் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.