ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ட்ராப் சிட்டி ‘ ஹாலிவுட் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி . பிரகாஷ் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் அடங்காதே , ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ,4G, ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் முதல் முதலாக ஜி.வி. பிரகாஷ் ஹாலிவுட்டில்’ட்ராப் சிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் இன்டர்நேஷனல் ஆல்பமான கோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஜூலியா கர்த்தா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளனர். இந்த பாடலின் லிரிக் வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார் .ஜி.வி.பிரகாஷின் இந்த இன்டர்நேஷனல் ஆல்பத்தை இசைப் பிரியர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.